உசிலம்பட்டி: கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

69பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் செல்லும் கால்வாயை முறையாக சரி செய்ய கோரியும், கால்வாய் செல்லும் பகுதிகளிலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாக்கடை கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நேற்று (ஜன. 26) குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து வந்த செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கப்பாண்டி தலைமையிலான அலுவலர்கள் சாக்கடை கால்வாய்களை ஆய்வு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி