உசிலம்பட்டி: 2வது நாளாக வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம்.

61பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (ஜன. 29) இரண்டாவது நாளாக உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் பிறப்பு இறப்பு சான்றிதழுக்கு இடைத்தரவர்களை வைத்து பணம் வாங்குவதாகவும், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு மனுக்களுக்கு கிடைத்தவர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாகும் நில அளவையர் பிச்சைமணி இடம், நிலம் உள்ளிட்ட நில அளவைகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிகளை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி இவர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கைகள் மற்றும் பணி மாற்றம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி