மேலூர்: கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 63.54 லட்சம் மதிப்பீட்டில் மூன்று புதிய வகுப்பறைக் கட்டிடங்களை இன்று (நவ. 8) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் தும்பைப்பட்டி ஊராட்சித் தலைவர் அயூப்கான், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோவன், தலைமை ஆசிரியை கண்மணி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.