மேலூர்: ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று (நவ. 19) சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் திருவாதவூர் சாலை, சிவகங்கை, திருச்சி சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனை செய்து வைத்திருந்த கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4,060 கிலோ நெகிழிப் பைகளைப் பறிமுதல் செய்தனர்.