எலான் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டின் 6-வது சோதனை இன்று தெற்கு டெக்சாசில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது. ஸ்டார்ஷிப் 2-ம் நிலை அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குள் உலகத்தை பாதியாகச் சுற்றி ஒரு துணைப் பாதையை அடைந்தது. இந்த ராக்கெட் சோதனையை அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் நேரில் பார்வையிட்டார்.