Apr 14, 2025, 03:04 IST/ஊத்தங்கரை
ஊத்தங்கரை
ஊத்தங்கரை: பரிகாரம் செய்வதாக பெண்ணிடம் பணம் பறித்த 2 பேருக்கு காப்பு
Apr 14, 2025, 03:04 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள மிட்டப்பள்ளி தளபதி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் இவருடைய மனைவி சரிதாவின் வீட்டிற்கு மார்ச் 29-ம் தேதி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஈச்சம்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த சரண் (25) ஜீவா (36) ஆகிய 2 பேர் ஜாதக பலன்கள் சரியில்லாமல் உள்ளதால் பரிகாரம் செய்து கொள்ளுமாறு சரிதாவிடம் கூறியுள்ளனர். இதற்கு சரிதா ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சரிதாவிடமிருந்து 5000 ரூபாய் பணம் அரை பவுன் தங்கம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை கோயிலில் வைத்து பூஜை செய்து தருவதாகக் கூறி வாங்கிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சரிதா இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரண், ஜீவா ஆகிய இரண்டு பேரை நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) கைது செய்தனர்.