கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தெவீரஅள்ளி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி கோவிலில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை மூலவர் தண்டாயுதபாணி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் யாராலமான பக்தர்கள் காவடி எடுத்து அழகு குத்தியும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார் இதில் சுற்றுவட்டார பகுதியில் சென்ற ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.