கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கிய 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை அன்று ஏதேனும் ஒரு ஒரு வட்டத்தில் நடைபெறும் அந்த வகையில் வரும் ஏப்ரல் 16 காலை 9 மணி முதல் 17-ம் தேதி காலை 9 மணி வரை பர்கூர் தாலுகாவில் மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் தங்கி, மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள். 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.