கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடிநீர் இல்லாமல் அந்த மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் ஆத்திரமடைந்த நேற்று புலியூர் கூட்ரோடில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந் பாரூர் போலீசார் மற்றும் டெப்டி பி. டி. ஒ. ஆகியோர் பொதுமக்களிடம் போச்சு வார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்கபடும் என்று உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.