கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழ்குப்பத்தை சேர்ந்த முகேஷ்(22) விஜயலட்சுமி(45) வெற்றி(42) ஆகிய மூன்று பேர் தாங்கள் நிருபர்கள் எனவும் மாதேப்பள்ளி கேசவன்(50) என்பவர் நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர் எனக்கூறி கடைக்கு சென்றுவிற்பனையாளர் குபேர்சிங்கிடம் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை எடை குறைவாக உள்ளது.
இதனால் செய்தி வெளியிடாமல் இருக்க ரூ. 5 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விற்பனையாளர் குபேர்சிங், பாரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 4-ங்கு பேர் மீதும் வழக்கு பதிந்து முகேஷ், விஜயலட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கேசவன், வெற்றி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.