

கிருஷ்ணகிரி: மழையால் வீடு இடிந்து விழுந்து பரிதவிக்கும் மூதாட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் நேற்று அதிகாலை பெய்த மழையால் பாளேதோட்டம் கிராமத்தில் உள்ள மூதாட்டிசரோஜா(80) என்பவர் வீடு இடிந்து விழுந்ததில் இதில் உறங்கிக் கொண்டிருந்த பழனிச்சாமி என்பவர் காயமடைந்தார். மேலும் மூதாட்டி சரோஜா வீடு இன்றி தவித்து வருகிறார். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வீட்டை சீர் செய்ய வேண்டும் என்று மூதாட்டியின் கோரிக்கையாக உள்ளது.