போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் திமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாசிச அரசை கண்டித்த மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பர்கூர் எம். எல். ஏ. தே. மதியழகன், திராவிட இயக்கச் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைத்த ஒன்றிய அரசை கண்டித்து சிறப்புரையாற்றினார்கள். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.