போச்சம்பள்ளி: என். தட்டக்கல் அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா.

55பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி அடுத்த என். தட்டக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. காவேரிப்பட்டிணம் வட்டார கல்வி அலுவலர் சபிக்ஜான் அவர்கள் தலைமை தாங்கினார். கி வீரமணி ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் கழகம் இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வாண்டிற்கான பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் 10 மாணவர்கள் சேர்ந்தனர்.

மேலும் இந்த பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவச் பரிசு பொருட்களும் வழங்கினர். இதில் ஊர் பொதுமக்கள், பெற்றோர் திரளானோ பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி