கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புது மோட்டூர் பகுதியிலிருந்து சிங்கல் கதிரம்பட்டிக்கு செல்லும் சாலையில் மின்வாரியம் சார்பில் மின்கம்பங்கல் நடப்பட்டுள்ளனர். இந்த மின்கம்பிகள் குறைவான உயரம் கொண்டிருப்பதால் அந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் லாரிகள் மீது மின்கம்பிகள் உராசியபடி வாகனங்கள் செல்கின்றன வாகனங்கள் செல்லும் வரை சவுக்கு கம்பியை பயன்படுத்தி தூக்கி பிடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின்கம்பிகளால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாழ்வான மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சமுக ஆர்வலர்களின் எதிர்பார்பாக உள்ளது.