கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி அடுத்த என். தட்டக்கல் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இந்த நிலையில் இவர்களுக்கு சமுதாய கழிப்பிடம் இல்லாத நிலையில் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் 2022 2023. சமுதாய கழிப்பிடம், கீழ் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இந்த சமுதாய கழிப்பிட கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டயே உள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.