
கரூர்: பைக், வைக்கோல் போருக்கு தீ வைப்பு
கரூர், குளித்தலை அருகே கீரனூர் கிராமம் கரையான்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (37). இவர் புதுவாடியில் உள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் வடிகால் வாரியத்தில் பம்பு ஆப்ரேட்டராக 18 வருடமாக தற்காலிக பணியாளராக உள்ளார். கடந்த 25ஆம் தேதி பம்பு அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக் மீது மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அதனை எடுத்து எரிந்து கொண்டிருந்ததை அவர் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். இதில் டயர், சீட்டு முழுமையாக எரிந்து போனது. நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போருக்கும் தீ வைத்துள்ளனர். இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.