கதவணை அமைக்க சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் சிவா தலைமையில் இன்று நடைபெற்றது. "தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் முதல் சட்டமன்ற தொகுதி குளித்தலையை புறக்கணிக்காதே" என்ற தலைப்பில் குளித்தலை காவிரி ஆற்றில் கதவணை கட்ட வலியுறுத்தி சிபிஐஎம் சார்பில் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து குளித்தலை காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மருதூர் முதல் உமையாள்புரம் வரை கதவணை அமைக்க 789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த இருந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்ட மர்மம் என்ன? கதவணை அமைக்கப்பட்டால் 44 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசனை வசதி பெறும். 50 டிஎம்சி க்கு மேல் உபரி நீரை விவசாயத்திற்கும் குடிநீருக்கும் சேமித்து வைக்க முடியும்.

  கதவணைத் திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வலியுறுத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு ராஜீ, ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், மா. குழு உறுப்பினர் சங்கரநாராயணன், ஒன்றிய குழு பிரபாகர், விவசாய சங்கம் இளங்கோவன், மாதர் சங்க தலைவர் ரஜனி, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த குளித்தலை பாஸ்கர் மற்றும் சிபிஐஎம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி