கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்புணர்வு நடந்ததை கண்டித்தும், கும்பகோணம் வலப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த பாமக சாதி வெறியர்களை கண்டித்தும் கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சுங்க வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றலரசு தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி (எ) வன்னியரசு, குளித்தலை ஒன்றிய செயலாளர் மாயவன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
இதில் கட்சியின் அமைப்பு செயலாளர் அப்துல் நாசர் Ex. MLA கண்டன உரையாற்றினார். இதில் மேற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ், மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், குளித்தலை தொகுதி செயலாளர் சுதாகர், கரூர் வடக்கு மாநகர செயலாளர் முரளி, வடக்கு செயலாளர் அருள், மாநகர பொருளாளர் ரகுமான், செல்லீஸ்வரன், நங்கவரம் பழனிவேல், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மலைவேல், குளித்தலை ஒன்றிய துணை செயலாளர் மகாலிங்கம், குமார், தர்மராஜ், பொய்யாமணி பாரதி, கடவூர் ராமச்சந்திரன், மேட்டுப்பட்டி தனபால், கனவை ராஜமாணிக்கம் நிகழ்ச்சியை நிறைவாக கிருஷ்ணராயபுரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன் நன்றியுரை கூறினார்.