கரூர்: பட்டாசு வெடித்த இளம் பெண்- தகாத வார்த்தை பேசியவர் கைது
தொழில் பேட்டை அருகே பட்டாசு வெடித்த இளம் பெண்ணை தகாத வார்த்தை பேசி தாக்கிய மூவரில் ஒருவர் கைது. கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி அருகே உள்ள ராயனூர் இரண்டாவது கிராஸ், அண்ணா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சந்தியா வயது (26). இவர் அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11 மணி அளவில் தொழில்பேட்டையில் உள்ள அவரது தாயார் வீட்டின் முன்பு பட்டாசுகளை வெடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த, அருகில் உள்ள சணப்பிரட்டி, பாரதியார் நகரை சேர்ந்த பிரவீன், ராதாகிருஷ்ணன், மற்றும் ஆதி திராவிட தெருவை சேர்ந்த சூர்யா ஆகிய மூன்று பேரும் சந்தியாவை தகாத வார்த்தை பேசி திட்டி உள்ளனர். இதனை சந்தியா தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தியாவின் தலைமுடியை பற்றி இழுத்து, கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்து துன்புறுத்தி உள்ளனர். இது தொடர்பாக சந்தியா அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு மறுநாள் நவம்பர் ஒன்றாம் தேதி சென்று விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார் சூர்யா.