கரூர்: ரூ. 78 லட்சம்-வளர்ச்சி திட்ட பணிக்கான பூமி பூஜை

63பார்த்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், தாந்தோணி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள வெள்ளியணையில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தில் இருந்து ரூபாய் 41.43 லட்சம் மதிப்பீட்டில் கருவாட்டியூர் முதல் கருநல்லியா கவுண்டனூர் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை எம்எல்ஏ சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார்.

இதே போல மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் தம்நாயக்கன்பட்டியிலும், புத்தாம்பூர் பகுதியிலும் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூபாய் 8. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையிலும், வெள்ளியணை குமாரபாளையம் நாய்க்கனூரில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையிலும் பங்கேற்று அதற்கான பணிகளை சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ரகுநாதன், ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி, முன்னாள் ஊராட்சி பெருந்தலைவர் ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசாமி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி