கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகே இருப்பு பாதையை கடந்து வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக நடைபாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த வழியாக குகை வழி பாதை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் அப்பகுதி மக்கள் பயன்படுத்திய பாதையை ஜேசிபி இயந்திரம் கொண்டு கற்களை நட்டு வேலி அமைத்து தடுத்துள்ளனர்.