கோவகுளம்- டூவீலர் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கோவகுளம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் மகாமுனி வயது 38.
அக்டோபர் 18ஆம் தேதி இரவு 11 மணி அளவில் சித்தலவாய் - கோவகுளம் செல்லும் சாலையில் இவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் கோவகுளம் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை அருகே சென்றபோது,
எதிர் திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, லாலாபேட்டை, கொடிக்கால் தெருவை சேர்ந்த முருகானந்தம் வயது 48 என்பவர் வேகமாக ஓட்டி வந்த தனியார் கொசுவலை நிறுவன பேருந்து, மகாமுனி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மகாமுனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து மகாமுனி அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.