மணவாசி-மகளிர் சுய உதவி குழுவினர் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு நடைபெற்றது.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில், இன்று
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மணவாசி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கிராம சேவை மையக் கட்டிடத்தில் திட்ட அலுவலர் பாபு தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் வங்கியில் கடன் பெற்று என்னென்ன தொழில் செய்து வருகின்றனர்.
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் மீண்டும் மீண்டும் அதிகப்படியான கடன் பெறுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கி தரும் என விளக்கம் அளித்தார்.
மேலும், குழுவினருக்கு அளிக்கப்படும் கடனில் குழுவில் உள்ள யாருக்கு முதலில் பண தேவை உள்ளதோ, அவர்களுக்கு வழங்கி, அதன் மூலம் அவர்கள் தொழிலை நடத்தி, கூடுதலான வருவாயை பெற்று அதன் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என விளக்கம் அளித்தார்.
மகளிர் சுய உதவி குழுவினரும் வங்கியில் பெற்ற கடனை வைத்து தொழில் செய்து வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளாதாரத்தை பெருக்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட இயக்குனர் அன்புராஜ், வட்டார இயக்க மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர் பங்கேற்றனர்.