இரையுமன்துறை:   துறைமுக பகுதியை பார்வையிட்ட கலெக்டர்

61பார்த்தது
குமரி மாவட்டம் இரையுமன்துறை, தேங்காய்பட்டணம் கடற்கரை பகுதிகளில் 3- வது நாளாக இன்றும் (18-ம் தேதி)  கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டு ராட்சத அலைகள் வான் உயரத்திற்கு எழும்பி கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்திய நிலையில் உள்ளது. இதில்  தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் இரையுமன்துறை முகத்துவார பகுதியும் ராட்சத அலையில் சிக்கி பலத்த சேதமடைந்து உடைந்தது. இதனால் தற்போது 253 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த மறுசீரமைப்பு பணிகள் முழுவதம் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு, மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்த இரண்டுக்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் சேதமடைந்த பகுதிக்கு எதிர்பகுதியில் சிக்கியதால் அவற்றை மீட்க முடியாத அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

       இந்த நிலையில் கடற்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட முகத்துவார பகுதியை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் பாதிப்படைந்த பகுதியை விரைந்து சரிசெய்யவும் அதற்கு தேவையான பாறைகள் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிச் சென்றார் தொடர்ச்சியாக கடற்சீற்றம் ஏற்படும் போதெல்லாம் சேதமடையும் இந்த துறைமுக முகத்துவார பகுதியை பாதுகாப்பான முறையில் சரியான திட்டமிடலுடன் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி