இரணியல்:   காரில் 3 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக அபராதம்

51பார்த்தது
இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.   நேற்று மாலை அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரது கார் எண் பதிவு செய்யப்பட்டு, இந்த மோட்டார் சைக்கிளில் 3 பேராக சென்றதாகவும், 3 பேரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அதற்காக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகும்  இருந்தது. மேலும் இந்த வாகனம் கன்னியாகுமரி பகுதியில் செல்லும் போது அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதில் அபராதம் விதித்த சப். இன்ஸ்பெக்டர்  பெயரும் இருந்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பேராசிரியர் கூறும்போது:  - எனது காரை கடந்த ஒரு வாரமாக வீட்டில் தான் நிறுத்தி உள்ளேன். வெளியில் எதுவும் செல்லவில்லை. இந்த நிலையில் கன்னியாகுமரி போலீசார் விதித்த அபராத செய்தி அதுவும் ஹெல்மெட் அணியாமல் 3 பேராக சென்றதாக வந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அபராத குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் எனது கார், வீட்டின் கார் போர்ஸில் நின்றதற்கான சிசிடிவி காட்சி பதிவுகளும் உள்ளது. இது தவறுதலாக போடப்பட்ட அபராதம் இல்லை. பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்டது. இது குறித்து தகுந்த ஆதாரங்களுடன் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்தி