ஏற்றி வைத்த ஊதுபத்தி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, இறுதியில் சாம்பல்தான் மிஞ்சும். தன்னையே சாம்பலாக்கிக் கொண்டு, தன்னை சுற்றியிருப்பவர்களை தன்னுடைய மணத்தால் மகிழ்விக்கும் சக்தி கொண்டது, ஊதுபத்தி. இது ஒரு தியாகத்தின் வெளிப்பாடு ஆகும். இறைவனை உண்மையாக நேசிக்கும் பக்தர்கள், தன்னுடைய சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும். அவர்கள் சிந்தனை பொதுநலம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை ஊதுபத்தி உணர்த்துகிறது.