தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு வந்த 2, 600 டன் ரேஷன் அரிசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளி மாவட்டங்களில் இருந் தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2, 600 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலமாக வந்தது. இந்த ரேஷன் அரிசியை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.