நாகர்கோவில் அருகே வீட்டில் பாலியல் தொழில்; 5 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், கோட்டாறு போலீசார் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து செல்வி, அனீஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் நேற்று(அக்.19) கைது செய்தனர். அவர்கள் மீது கோட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.