கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே சாலையோரம் 15-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை அந்த இடத்திலிருந்து பேரூராட்சி நிர்வாகம் மாற்ற முயற்சி செய்து வருவதாகவும், “இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இன்று (அக்-16) குமரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு அளித்தனர்.