கன்னியாகுமரி மாவட்டத்தில் பிள்ளைத்தோப்பு பகுதியில் நேற்று (அக்.,15) இரவு திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை தொடர்ந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து, வீடுகளுக்குள் தண்ணீர் செல்லாமல் இருக்க மணல் மூடைகள் அடுக்கி வீட்டின் முன்பு தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர்.