ஒவ்வொரு திங்கள்கிழமையும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று திங்கட்கிழமையை ஒட்டி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் ஏராளமானோர் பல்வேறு பிரச்னைகள் குறித்து மனு கொடுத்தனர். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.