நாகர்கோவிலில் அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நாகர்கோவில் வடக்கு மண்டலம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை குமரி மாவட்ட பொறுப்பாளர் ஜாண் தங்கம் மற்றும் அதிமுக வடக்கு மண்டல செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஸ்ரீலிஜா, முன்னாள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஆகியோர் வழங்கினர்.