நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற போலீசாரின் சங்க பொதுக்குழு கூட்டம்

57பார்த்தது
கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. சங்க கவுரவ தலைவர் அப்துல்லா இஸ்மத், சங்க ஒருங்கிணைப் பாளர் மரிய ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சங்கத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீஸ் கேண்டினில் ஜி. எஸ். டி. யுடன் கூடிய மருந்தகம் அல்லது பிரதம மந்திரி மலிவுவிலை மருந்தகம் அமைக்க வேண்டும். போலீஸ் துறையில் 2-ம் நிலை காவலர்களின் அடிப்படை சம்பளம் அமைச்சுப் பணியாளர்களின் இளநிலை உதவியாளருக்கு இணையாக உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி