கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட திக்கணங்கோடு பாசன கால்வாய் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட பாசன குளங்கள் பயன்பெற்று வருகிறது. தற்போது இந்த கால்வாய் சீரமைப்பு பணிகள் பல்லாண்டுகளாக மேற்கொள்ளாத காரணத்தால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத வகையில் காணப்படுகிறது. இது தொடர்பாக பொது மக்களின் புகாரின் பேரில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ அந்த கால்வாய் சென்று ஆய்வு செய்தார்.
இதற்கிடையில் அந்த கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டு நேற்று கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார், குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் சம்மந்தபட்ட கால்வாய் மற்றும் மதகுகளை கரைகளை உடனடியாக சீரமைத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் திறந்து விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.