திக்கணங்கோடு கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கேட்டு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகளுடன் சென்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து திக்கணங்கோடு கால்வாய் தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திக்கணங்கோடு கால்வாயில் சைப்பன் முதல் செம்பென்விளை பகுதிகள் வரை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி வருகிற 28-02-2025 ஆம் தேதிக்குள் திக்கணங்கோடு கால்வாயின் அனைத்துக் கடைவரம்பு பகுதிகள் வரை தண்ணீர் கிடைக்கும் வகையில் திக்கணங்கோடு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகமும், நீர்வளத் துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தவறும் பட்சத்தில் பொதுமக்களைத் திரட்டி வருகிற 01-03-2025 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு திக்கணங்கோடு சந்திப்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கோரிக்கை மனுவை சட்டமன்றக் காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் வழங்கினார்.