பத்மநாபபுரம் - Padmanabhapuram

அருமனை: பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு

அருமனை அருகே மலமாரி பகுதியைச் சேர்ந்தவர் நாராயண நாயர் மனைவி ஆஷா லதா (55). மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இன்று (22-ம் தேதி) காலை ஆஷாலதா அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென ஆஷா லதாவை ஓங்கி அடித்தார்.  இதில் அவர் நிலைகுலைந்து போனார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆஷா லதா கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு மர்ம நபர் பைக்கில் தப்பி சென்று விட்டார். ஆசிரியையை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருமனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நகை பறித்துவிட்டு தப்பியவரைத் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా