காஞ்சிபுரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியை ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கீர்த்தி வாசன் குடியரசு துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க துறை சார்பாக போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த போதை ஒழிப்பு பேரணியை ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கீர்த்திவாசன் துவக்கி வைத்தார்.
இந்த போதை ஒழிப்பு பேரணியில் தனியார் கல்லூரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கைகளில் போதை ஒழிப்பு பதாகைகளை ஏந்தி ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதே சமயத்தில் ஸ்ரீபெரும்புதூர் காவலர்கள் போதையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதை ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்தான விழிப்புணர்வு கைப்பிரதிகளை சாலையில் நடந்துசெல்கிறவர்கள் மற்றும் கடைகளுக்கு வழங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.