கரசங்கால் கிராமத்தில் கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி

80பார்த்தது
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் வசந்தா அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் திறப்பு விழா காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கரசங்கால் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் வசந்தா அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட கவுன்சிலர் வசந்தா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் கோகுலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிரேகா, முத்துக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி