செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த முகையூர் பகுதியில் தமிழ்நாடு பனைஏறிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கள் தடை நீக்குவது தொடர்பான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் பேசியவர் பனைமரத்து கள் குறித்து சான்றோர்கள் கூறிய புறநானூற்று தகவல்களை எடுத்துக் கூறினார் மேலும் பனை மரத்திலிருந்து எடுக்கும் கள்ளில் போதைப் பொருட்கள் இருக்குமேயானால் அதை குறித்து விவாதிக்க நாங்கள் தயார் தமிழ்நாடு அரசு தயாராக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்பது கள் இறக்க அனுமதி அல்ல கள் இறக்குவது எங்கள் உரிமை அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கள் உரிமையை நாங்கள் கேட்கிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது நாங்கள் கள்ளுக்கடை திறக்க கேட்கவில்லை வெளி மாநிலங்களில் இருக்கும் சட்ட திட்டங்களை குறித்து மட்டுமே கேட்கிறோம் என்றவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் பனை மரத்திலிருந்து எடுக்கும் கள்ளை வணிகமாக தமிழக அரசு பார்க்குமேயானால் தமிழ்நாடு அரசு பொருளாதாரத்தில் வல்லரசாக இருக்கும் என்றார் இதில் பனையேறி தொழிலாளர்களின் மாநில செயலாளர் பாலமுருகன் பொருளாளர் கண்ணன் பனையேறி தொழிலாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.