மாமல்லபுரம் அருகே இலவச சட்ட உதவி குறித்த முகாம்..

65பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் விநாயகா மிஷின் சட்டக் கல்லூரி சார்பில் பாமர மக்களும் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கோடு செங்கல்பட்டு மாவட்ட இலவச சட்ட உதவி மையத்துடன் இணைந்து ஒரு நாள் சட்ட ஆலோசனை முகாம் மணமை ஊராட்சி மன்ற தலைவர் செங்கேணி தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவு சார் சொத்துரிமைகள் மற்றும் தொழில்நுட்ப கொள்கை நிபுணர் டாக்டர் அனந்தபத்மநாபன் செங்கல்பட்டு மாவட்ட சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தீபா, த்ரேசா, மேரிசெலின் கலையரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாமர மக்களும் சட்ட நடைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களுக்கான சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர் முகாமில் மகளிருக்கான சொத்து பெறுவது குறித்தும் விபத்து ஏற்பட்டிருப்பின் அதற்கு உண்டான நஷ்ட ஈடு பெறுவது அதற்கு உண்டான வழிமுறைகள் குறித்து பல்வேறு தேவைகளை பொதுமக்கள் வழக்கறிஞர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர் நிகழ்வில் சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் கிருஷ்ணகிஷோர் பட்டாலா ஊராட்சி மன்ற துணை தலைவர் பூர்ணிமா சண்முகசுந்தரம் வார்டு உறுப்பினர்கள் சட்டக் கல்லூரி மாணவ மாணவியர் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி