ஒரத்தியில் பெரியப்பாவை கத்தியால் அடித்து கொன்ற மகன்
செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி கிராமத்தில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். பிரகாஷின் மனைவி ஜமுனா ராணியின் தங்கை மகன் சூர்யா இவர் அவருடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில் நேற்று இரவு பிரகாசிக்கும் சூரியனுக்கும் இடையே சந்தை ஏற்பட்டுள்ளது இதில் சூர்யா தனது பெரியப்பாவை கட்டை மற்றும் கத்தியை கொண்டு தலையில் தாக்கியுள்ளார் ரத்த வெள்ளத்தில் இருந்த பிரகாஷை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்பொழுது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரகாஷ் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒருத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.