பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன்பின்னர் அவர் மனைவி பொற்கொடிக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பதவியில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். அவர் இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார் எனவும், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.