டீசல் மற்றும் சுங்கக்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு லாரிகள் கர்நாடகா வழியாக செல்ல வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. லாரி வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு காய்கறிகளின் வரத்தும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.