சர்வதேச அளவில் மாமல்லபுரம் சுற்றுலா நகரம் புகழ் பெற்று விளங்கி வருகிறது. இங்குள்ள, புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் நாள்தோறும் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரை சேர்ந்த 10 பேர் கொண்ட கண் பார்வையற்ற சுற்றுலா பயணிகள் அங்குள்ள சமூக சேவகர்கள் சிலர் மூலம் பாரீஸ் நகரத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நேற்று
சொகுசு பேருந்து மூலம் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். ஐந்துரதம் பகுதிக்கு வந்த அவர்களை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் வரவேற்றார். கண் பார்வையற்ற பிரான்ஸ் நாட்டு பயணிகளிகளுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சிற்பங்கள் பல்லவர் காலத்தில் எந்த மன்னரால் செதுக்கி, வடிவமைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை தெளிவாக விளக்கி கூறினார். தொடர்ந்து ஐந்து ரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களுக்கு அருகில் கண்பார்வையற்ற பிரான்ஸ் நாட்டினர் அங்கு அமர்ந்து கைகளால் சிற்பங்களை தொட்டு பார்த்தும், தங்களது கைகளால் தட்டி அதன் ஓசையை காதில் கேட்டும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, சிற்பங்கள் குறித்து விளக்கிய சுற்றுலா வழிகாட்டியிடம் பல்லவ மன்னர்கள் செதுக்கிய சிற்பங்களை எங்களால் தொட்டு தான் பார்க்க முடிந்தது.