செய்யூர் - Seiyur

செங்கல்பட்டில் மழையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

செங்கல்பட்டில் மழையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை கோட்டம், செங்கல்பட்டு உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை பெய்ததில், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, ராஜிவ்காந்தி சாலை உளிட்ட பகுதிகளில் சாலை சீரழிந்தது. இச்சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 60 கி. மீ. , சாலைகள் சீரழிந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாலம் உள்ள பகுதிகளில், கால்வாய்களை துார் வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా