மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு இரண்டு தினங்களாக உணவு வழங்கும் நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் க. சுந்தர் எம். எல். ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் ஆகியோர் பங்கேற்பு!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வெளியம்பாக்கம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இரண்டு தினங்களாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் சிவகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் செய்யப்பட்டு வருகிறது. முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை
காஞ்சி தெற்கு மாவட்ட செயலர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மக்களுக்கு அறுசுவை உணவை வழங்கி பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை துணை அமைப்பாளர் பொன்மலர்சிவகுமார், உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.