செங்கல்பட்டு மாவட்டம்
கேளம்பாக்கம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டை கண்டித்தும், முறையாக மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர் ஒன்றிய கேளம்பாக்கம் ஊராட்சியில் தொடர்ச்சியான மின் வெட்டு, அடிக்கடி மின் தடை இருந்துவருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வீட்டில் உபயோகிக்கப்படும் மின்சாதன பொருட்களும் பழுதடைகிறது.
இதனால் இன்று கேளம்பாக்கம் துணை மின்நிலைய அலுவலகத்தை கேளம்பாக்கம் வியாபாரிகள் சங்கத்தினர், மற்றும் குடியிருப்பு சங்கத்தினர், பொதுமக்கள் என 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும், முறையான மின்தடை அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் தெருக்களில் மின்கம்பம் பழுது ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப 33 கே. வி. , யை 110 கே. வி. யாக தரம் உயர்த்தும் பணி கிடப்பில் உள்ளதாகவும் எந்த ஒரு பணியையும் மின் வாரிய அலுவலர்கள் மேற்கொள்ளவில்லை என பல்வேறு குற்றச்சாட்டை தெரிவித்து மின் வாரிய அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கேளம்பாக்கம் போலீசார் 30 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.