மதுராந்தகம் அருகே இரண்டு தினங்களாக பெய்த கனமழையால் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு காணாமல் போனதால் பொதுமக்கள் அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணறு கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக காணாமல் போனால் கிணறால் கிராம மக்கள் அதிர்ச்சி
பெரும்பாக்கம் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் கிராமத்தில் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் புதியதாக ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது.
இந்த குடிநீர்
கிணறு கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் முழுவதும் சரிந்து கிணறு காணாமல் இப்போது குட்டையாக மாறி உள்ளது. இதனால் குடிநீர் கிணறு காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி இக்கிராமத்திற்கு புதிய குடிநீர் கிணறு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.