நெற்குணம் ஊராட்சியில் கிராம மக்கள் உண்ணாவிர போராட்டம்

58பார்த்தது
புதிய
கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கிராம மக்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெற்குணம் ஊராட்சியில் அடங்கிய வயலூர் கிராமம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் புதிய கல்குவாரி அமைக்கும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடந்தது வருகிறது. எந்தவித அறிவிப்புமின்றி அமைக்கப்படும் இந்த குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் என பலரிடம் புகார் அளித்தும் அனைவரும் குவாரிக்கு சாதகமாக இயங்குவதாக அப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனால் அக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் உண்ணாவிரதம் நடத்துவதற்காக அச்சிறுப்பாக்கம் காவல் துறையிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். ஆனால் காவல் துறை அதற்கு அனுமதி மறுக்க ஆத்திமடைந்த கிராம மக்கள் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இன்று தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி