சண்டையில் சட்டை கிழிந்ததால் விரோதம் வாலிபர் கொலை ஒருவர் கைது

66பார்த்தது
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 39. நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல நடைபயிற்சி சென்ற போது, மர்ம நபரால் மகாலட்சுமி நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, முதற்கட்டமாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்து ஆய்வு செய்தனர்.


சம்பவ இடத்திலிருந்து ஓடிய நாய், புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த முத்து, 45, என்பவரின் வீட்டை சுற்றி வந்தது. இதையடுத்து, போலீசார் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், முன்விரோதம் காரணமாக முத்து, சரவணனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

போலீசார் கூறியதாவது:

சரவணனுக்கும், முத்துவுக்கும் இடையே, மூன்று மாதங்களுக்கு முன், தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில், முத்துவின் சட்டை கிழிந்துள்ளது.


இதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக, நேற்று முன்தினம் காலை, சரவணன் தனியாக நடைபயிற்சி சென்ற போது, முத்து அவரின் தலையில் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


விசாரணைக்கு பின், போலீசார் முத்துவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி